Tuesday, September 26, 2006



யார் கடவுள்?

ஆழ்ந்த உறக்கத்தினூடே விழித்தெழுந்தது போலெழுந்து அமர்ந்து கொண்டது அடி நெஞ்சில் கேள்வியொன்று...!

படைப்பனைத்தும் முடித்துவைத்த பரம்பொருளே ஆகிடினும்
இயங்குலகின் இயக்கமதை மாற்றவியலா இறையென்றால் இருந்தும் அதை நீர் வணங்குவீரோ?

"ஆம்" எனில் நீர் வணங்கவேண்டியது ஈசனை அல்ல, உமை இவ்வுலகிற்கு ஈன்றவரை....!

"இல்லை" எனில் வணங்கிச்செல்லும்
அறிவுப்பசி தீர்த்த கல்விச்சாலையையும்
உறுபசி ஒழித்தழித்த உத்தியோகத்தையும்...!

கேள்வி/பதில் எதுவும் புரியலியா?
இதையெல்லாம் கடந்த "அது" வாகவே இருக்கிறாய்
வா....!இப்படி என்னருகில் வந்து உட்கார்.

Monday, September 04, 2006

என்னெ ஆறும் கேக்கலெ...!

இருந்தாலும் எனக்கு பிடித்த ஆறு இங்கே

6 - சிறுகதைகள்
----------------------

1. "கயிற்றரவு"

(என் எண்ணத்தையும் வாழ்க்கை பாதையையும் தலைகீழாக புரட்டிப் போட்ட புதுமை பித்தனின் சிறுகதை இது)

2. ஜெயமோகனின் - மாடன் மோட்சம்
3. கங்காவரம் - ஆசிரியர் நினைவில்லை
4. ஜெயகாந்தனின் நந்தவனதிலோர் ஆண்டி
5. கல்லறை - அ. முத்துலிங்கம்
6. அணில் குஞ்சு - கருணாநிதி

6 - திரைப்படங்கள்
-------------------------
1. அவர்கள் - K. பாலச்சந்தர்
2. அழகி - தங்கர் பச்சான்
3. விருமாண்டி - கமல் ஹாசன்
4. வேதம் புதிது - பாரதி ராஜா
5. ரெட்டை வால் குருவி - மகேந்திரன்
6. 16-வயதினிலே - பாரதி ராஜா

6 - பிற மொழிப் படங்கள்
-----------------------------------
1. மில்லியன் $ பேபி
2. BLACK (Hindi)
3. RAIN MAN
4. அபு (Bengali -சத்யஜித்ரெ)
5. A Beautiful Mind
6. Cast Away

வியக்க வைத்த 6 எழுத்தாளர்கள்
------------------------------------------------
1. ஜெய மோகன்
2. சுந்தர ராமசாமி
3. தி. ஜானகிராமன்
4. சாரு நிவேதிதா
5. அ. மார்க்ஸ்
6. கோவை ஞானி

Tuesday, July 11, 2006

அன்புள்ள தீவிரவாதிக்கு..!

எனக்கு தெரியாது...நீ

இந்தியனா? பாகிஸ்தானியா?
ஆப்கானிஸ்தானியா?

யாராயிருந்தாலென்ன?

உனக்கு பின்னல் இருப்பது
மதமா? ரணமா? பணமா?
எதுவாயிருந்தாலென்ன?









ரத்தம் தோய்ந்த சதை துண்டுகள் தவிர்த்த
என்ன வேண்டும் உனக்கு?

நோய், வறுமை, விபத்து மற்றும் வாழ்வியல் சிக்கல்கல் பல தாண்டி
உயரப் பறந்ததென் உயிர்ப்பறவை
வெட்டுண்டு சாய்ந்ததுன்னால் இன்று
யாதொரு பயனுமின்றி

தேசியம் பற்றிய கற்பிதங்களோ
பாவ-புண்ணியக் கூட்டல் கழித்தல்களோ
ஏதும் தெரியாதெனக்கு.

உன் உடலில் உயிர் இருக்கோ?, நீயும் என்போல் சிதரி உதிர்ந்து போனாயோ? அதுவும் தெரியாதெனக்கு.

எல்லாம் முடிந்தாகி விட்டது...நானென்ன செய்ய இப்போ?

என்னால் முடிந்தது....மன்னித்து விட்டேன்
முடிந்ததை செய் உன்னால்,
உயிர்த்திருக்கும் காலம் வரை..