Thursday, December 27, 2007

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது -- குறித்து....!!!

மு. இராமனாதன் கூறியது போல (http://www.thinnai.com/?module=displaystory&story_id=60712203&format=html )முத்துலிங்கத்தின் படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றாலும், கருத்தளவில் உண்மையிலேயே எவ்வளவு நீள்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

நேர்காணலின் உச்சமாக ஆசிரியரின் கீழ்கண்ட கேள்வியும் அதற்கான பதிலும் முன்னிறுத்தப்படுகிறது.

"நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப் பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்? உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது தேர்வு செய்யலாமே?"
இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பும் ஜெனிவீவ் கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்துப் பேசுகிறாள்: "ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள் எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாரும் தினம் தினம் தங்களை வருத்திப் பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடம்பின் எல்லையைக் கண்டுபிடிப்பது. அதைச் சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு."


இங்கு தமிழ் சினிமா Hero போன்று அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தும் போக்கை காண்பதை தவிர்க்க முடியவில்லை. பதிலில் சாமார்த்யம் இருக்குமளவிற்கு சரக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பணம், புகழ் நிமித்தம் அநேகமாக வர்த்தகமாக்கப்பட்டுவிட்ட இன்றய விளயாட்டு வீரர்களின் நோக்கத்தை "உடம்பை அறிவது" என்பதன் கீழ் வகைபடுத்தியது நெருடலையே ஏற்படுத்துகிறது.

விளயாட்டு என்பது என்ன? ஏன் தோன்றியது? அதன் நோக்கம் என்ன? இன்றயதினம் உலக அரங்கில் விளையாட்டு என்ற பெயரில் நடந்துகொண்டிருப்பதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம் ?

உடம்பை, மனதை ஆரோக்யமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, வெற்றி-தோல்விகளை இலகுவாகப் புரிந்து கொள்ள உதவுவது மற்றும் ஒரு குழுவாக செயல்பட்டு (team work) எப்படி வெற்றி ஈட்டுவது என்பதை புரிந்துகொள்தல் போன்றவை விளையாட்டின் பயன்கள். இதில் எதுவும் இன்றய விளையாட்டில் இருப்பதாய் தெரியவில்லை. குத்துச்சண்டை எப்படி ஒரு விளையாட்டாக இருக்க முடியும்?

இன்றய உலகில் அநேகமாக அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களும் உடல் நலத்தை விற்று பணமும் பதக்கங்களும் ஈட்டுபவர்களாகவே உள்ளனர். இவர்களின் "எல்லை நீட்டுகிற" முயற்சியில் எத்தனைமுறை "knee surgery" செய்து கொள்கிறார்கள் ? இது மேலும் நீண்டு ஊக்க மருந்து உட்கொள்தல், மற்றும் அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு அரசியல் (Indian cricket)...... இதில் "உடம்பை அறிதல்" எங்கு நிகழ்கிறது? இதையும் தாண்டி "இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு" என்பது நிஜமாகவே தொண்டையில் சிக்கிக்கொள்கிறது.

விளையாட்டு என்பது தன்னளவில் உன்னதமானது. தற்கால தொழிலதிபர்கள் அதை விளம்பரமாக்கி வியாபாரமாக்கிவிட்டனர். விளையாட்டு வீரர்களோ கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ரசிகர்களோ நேரத்தையும் பணத்தையும் பாழ்படுத்துகின்றனர். இந்த பரிதாபமே விளையட்டு என்ற பெயரில் இங்கு அரங்கேருகின்றது.

சரி...இவையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஒரு மிக நேர்மையான விளையாட்டு வீரரையே எடுத்துக்கொள்வோம். அவருடைய அதிகபட்ச உன்னதமான நோக்கம் என்னதான் இருந்துவிட முடியும்? அவருடைய திறமையை நிரூபிக்க வேண்டும், அது பணமாகவோ, புகழாகவோ அவரை வந்து சேரவேண்டும் என்பதைத்தவிர? இதில் "உடம்பை அறிதல்" என்று ஒரு யோகியைப் போலவோ, சேவை என்ற அளவிற்கு புனிதப்படுத்துதலோ தேவையற்றது என்பது என் கருத்து. நல்லவேளை, இதில் தேசப்பற்று என்ற புண்ணாக்கையும் சேர்த்து சிக்கலை பெரிதாக்காமல் விட்ட அம்மையாருக்கும் கட்டுரை ஆசிரியருக்கும் நன்றி.

Saturday, February 17, 2007

தனிமை

வீட்டில் விளக்கு வைத்துவிட்டு
காத்திருக்கிறது எனக்கான தனிமை

தனித்திருந்த பொழுதெல்லாம் துணைக்கிருந்தன காப்பியங்களும் சிரிதளவு காமமும்

எப்பொதேனும் சிலருக்கு வேண்டியிருக்கும் இத்தனிமை நிரந்தரமாய் தேங்கியிருகிறதெனை தேடிவந்து

நாட்கள் நகர்வதும் பின் உதிர்வதுமாய்
நிகழ்வு குவியல்கள் மீது
நீண்டு மீள்கிறதென் காலம்

என்ன யோசித்தும் விளங்கவேயில்லை...!!!,
தனித்திருக்க என்ன இருக்கிறது?
ஏதுமற்ற சூனியத்தில்...!!!

Tuesday, January 23, 2007

GURU-A waste of time and Mani(rathnam)


I went with the expectation that ManiRathnam would deliver to his own standards. I don't think he did a good job on that. Here is why I think so.


1. At the beginning, he showed Iswarya like a freak, freedom loving, outgoing personality. This created a image about her and start expecting a strong character out of her in the movie.......but she is used just as a beautiful doll, and has nothing to do in the life of a great man except used as his mouth piece at the end. What a waste of resource?


2. The way Abishek handles with IAS officer is a repetition of what Rajini does against M.L.A (sending all his cows to M.L.A 's house) in Annamali movie. Poor IAS officer had no other option other than coming to Abhishek's APT standing in the rain and begging.


3. The villain (contractor at the stock market) gave a big build-up initially, but nothing worth-while on his part. Golfing scene is not all that mind blowing.


4. Iswarya's brother moves away from his business for no BIG/specific reason.......He went away just to make Iswarya move away from Abishek. They joined together little later anyway, didn't solve any purpose eventually. Just to create sympathy for Abhishek.....director vikraman would have done a fantastic job on this scene.


5. Abhishek wanted to say something to the enquiry committee at the end of the first day, which is just "Namasthe", Ishwara shows sarcastic smiles out of that comment.......Mani would have expected claps at that scene.....but nothing happened in the theater.


6. Not sure why he created a character who is sitting in the wheel chair al-thru the movie.......Just to create a feel that, though Abhishek is big business man, he does have a soft corner and stuff that will make ordinary Indian fan feel great about his personality.


7. The scene Madhavan asking Wheel-chair girl for marriage did really look bad as if he is doing a great favor to her, there by insulting her current state of being. It should have been felt by audience as moments of great compassion. Director like Mani can NOT make that mistake.


8. The song where Abhisek is drinking and dancing doesn't fit in the screen play well enough.


9. The whole enquiry committee shuts itself off just because of Abhisek's 2 minute climax's speech. The head of the committee says...."We can not hang him for what he did"......of course they can not, but they could punish him for whatever wrong he did against business ethics.


10. Abishek as a business leader violated every law, safety standards, Media ethics and what not .......He had only one thing in mind " TO WIN " in the business. Finally Mani portrayed him as a National leader, who struggles to bring India up and a patriotic guy. This all Bull crap.


11. One last thing........Mani is famous for handling true stories, and projecting them as the way it is on the screen with reality of the character play the major role. But he left room for hero worship in his movie like other directors.


I can NOT imagine GURU is directed by a guy who created "Anjali"

Monday, January 22, 2007

நீ...நான்...அது...!!!













அன்னமய உடம்பாய்
பொறுக்கித் திணித்துமாய்
போவோன், வருவோன் பிடுங்கவும், செதுக்கவுமாய் விரிந்த மனோமய மரமாய் நீ...

பார்த்து, படித்து, பழகி மற்றும்
நேற்றய எச்சங்ளின் உருவாய் நான்...

என்னில் எங்கோ நீ,
உன்னில் ஏதோ நான், இதுபோல்
யாரும், எதுவாயும் இல்லா மாயந்தனை

கலைத்து, குலைத்து மெதுவாய்
சலித்து நகரும் கால சர்ப்பமாய் அது...!


Thanks to An & for the picture