அன்புள்ள தீவிரவாதிக்கு..!
எனக்கு தெரியாது...நீ
இந்தியனா? பாகிஸ்தானியா?
ஆப்கானிஸ்தானியா?
யாராயிருந்தாலென்ன?
உனக்கு பின்னல் இருப்பது
மதமா? ரணமா? பணமா?
எதுவாயிருந்தாலென்ன?
ரத்தம் தோய்ந்த சதை துண்டுகள் தவிர்த்த
என்ன வேண்டும் உனக்கு?
நோய், வறுமை, விபத்து மற்றும் வாழ்வியல் சிக்கல்கல் பல தாண்டி
உயரப் பறந்ததென் உயிர்ப்பறவை
வெட்டுண்டு சாய்ந்ததுன்னால் இன்று
யாதொரு பயனுமின்றி
தேசியம் பற்றிய கற்பிதங்களோ
பாவ-புண்ணியக் கூட்டல் கழித்தல்களோ
ஏதும் தெரியாதெனக்கு.
உன் உடலில் உயிர் இருக்கோ?, நீயும் என்போல் சிதரி உதிர்ந்து போனாயோ? அதுவும் தெரியாதெனக்கு.
எல்லாம் முடிந்தாகி விட்டது...நானென்ன செய்ய இப்போ?
என்னால் முடிந்தது....மன்னித்து விட்டேன்
முடிந்ததை செய் உன்னால்,
உயிர்த்திருக்கும் காலம் வரை..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நண்பர் RAMS பின்னூட்டமிட்ட மற்றுமொரு அழகான கவிதை...!
இது நாம் எழுதிய கவிதை யாருக்கொ இன்று!
நமக்கு எழுதபோவது
யாரோ நாளை!
தொடரும் துயரங்களும்.......கவிதைகளும்....
படிக்கத்தான் ஆளில்லை....அய்யோ...பாவம்!
திருமூலரே,
நல்ல கவிதை.
நான் சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் வழியில் இருந்த ஒரு கிருத்துவ கல்லறையில் இருந்த வாசகம்
" இன்று எனக்கு ... நாளை உனக்கு"
//படிக்கத்தான் ஆளில்லை....அய்யோ...பாவம்! //
வாங்க! நானிருக்கேன்
அண்ணாச்சி
நம்ம படத்தை போட்டு இருக்கீங்க போல.
அப்படியே என் பட பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்து இருந்தால் , உங்களை மாதிரி நாலு பேரு நம்ம பக்கம் வருவாங்களே..
Post a Comment