Saturday, February 17, 2007

தனிமை

வீட்டில் விளக்கு வைத்துவிட்டு
காத்திருக்கிறது எனக்கான தனிமை

தனித்திருந்த பொழுதெல்லாம் துணைக்கிருந்தன காப்பியங்களும் சிரிதளவு காமமும்

எப்பொதேனும் சிலருக்கு வேண்டியிருக்கும் இத்தனிமை நிரந்தரமாய் தேங்கியிருகிறதெனை தேடிவந்து

நாட்கள் நகர்வதும் பின் உதிர்வதுமாய்
நிகழ்வு குவியல்கள் மீது
நீண்டு மீள்கிறதென் காலம்

என்ன யோசித்தும் விளங்கவேயில்லை...!!!,
தனித்திருக்க என்ன இருக்கிறது?
ஏதுமற்ற சூனியத்தில்...!!!

1 comment:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

அன்புள்ள கர்மா,
ஆம்.ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.அதிலும் என் கார்த்தி மிக மிக அரிய பொக்கிஷம்.
உங்கள் தனிமை என்ன?கவிதை மிகவும் அருமை. மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.சூனியம்.ஆம்.நம் மனதை ஒரே ஒருவற்கு அடிமையாக்குகிறோம்.அந்த ஒருவரின் பிரிவு இந்த வுலகத்தை சூனியமாக்கி விடும்.என் மனம் அடிமைப் பட்டது கார்த்தியிடம். என் செல்ல மகனிடம்.உங்கள் தனிமை நீங்க என் பிரார்த்தனைகள்.
அன்புடன்,
கார்த்திக் அம்மா