
அன்னமய உடம்பாய்
பொறுக்கித் திணித்துமாய்
போவோன், வருவோன் பிடுங்கவும், செதுக்கவுமாய் விரிந்த மனோமய மரமாய் நீ...
பார்த்து, படித்து, பழகி மற்றும்
நேற்றய எச்சங்ளின் உருவாய் நான்...
என்னில் எங்கோ நீ,
உன்னில் ஏதோ நான், இதுபோல்
யாரும், எதுவாயும் இல்லா மாயந்தனை
கலைத்து, குலைத்து மெதுவாய்
சலித்து நகரும் கால சர்ப்பமாய் அது...!
Thanks to An & for the picture
1 comment:
கவிதை குடித்துக் களைத்த
வண்டுகளாய் நாங்கள்...!!!
பாராட்டுகள்...
Post a Comment