இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று எங்கிருந்து இதை ஆரம்பிப்பது? எது சரி, எது தவறு?
Tuesday, September 16, 2008
கேள்வி: பகுத்தறிவாளர்களுக்கு...!!!
இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று எங்கிருந்து இதை ஆரம்பிப்பது? எது சரி, எது தவறு?
Sunday, September 07, 2008
மதம் பிடித்தவர்களுக்கு...!
கேள்வி: குமரன், மதுரையம்பதி, கீதாம்மா ஞானவெட்டியான் மற்றும் அனைத்து இந்துமத அன்பர்களுக்கும்...!!!
1. கர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா ?
எனது பதில்:
என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).
If someone knows better, please corrct me.
கோவியின் எதிர்வினை:
ஆன்மாவில் கர்மமற்ற நிலையில் எண்ண அலைகளே இருக்காது பிறகு எப்படி விருப்பம் தோன்றி பிறப்பு எடுக்க முடியும் ? முக்தி அடைவது என்றால் என்ன ? முக்தி அடைந்தவர் பிறக்க முடியுமா ?இதற்கு உங்களின் பதில் தேவை.
கோவி அவர்களின் இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம்.
2. ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது ?
எனது பதில்
சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.
அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.
கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
கோவியின் எதிர்வினை:
பிறப்பு / இறப்பு உடல் தொடர்புடையது தானே, அது உண்மையும் கூட அதை எப்படி கற்பனை என்று சொல்ல முடியும் ? ஆன்மா என்று இருப்பதே பிறப்பின் பயனாகத்தானே அறிய முடியும் ? பிறப்பற்ற நிலையில் தன்னைத் தான் உணர்வது சாத்தியமா ? வெளிச்சம் எதன் மீது படவில்லை என்றால் வெளிச்சம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது தானே.
இதற்கும் உங்களின் பதில் தேவை.
Friday, September 05, 2008
கேள்வி: இஸ்லாமிய அன்பர்களுக்கு...!!!
உங்களுக்கு ஒரு கேள்வி.
திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா? நரகமா? ஏன் என்றும் விளக்கவும்.
நான் கூறும் காட்டுவாசிக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு இறை கொள்கை, பல இறை கொள்கை என புரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. திருக்குரான் பற்றியோ, ஒரு கடவுள் பற்றியோ அந்த காட்டுவாசி சமூகத்திற்கு சொல்வதற்கு யாருமில்லை.
இவ்வாறாக வாழ்கையை கழித்தபின் அவர்க்கு சொர்க்கமா? நரகமா? ஏன்?