Tuesday, September 16, 2008

கேள்வி: பகுத்தறிவாளர்களுக்கு...!!!


அனைவரும் விரும்புவது ஒரே ஒரு விஷயத்தைதான், Happyness.

இதை எல்லோரும் அவரவர்களுக்கு தெரிந்த வகையில் அடைவதற்கு முயற்சிக்கின்றனர். ஒருவர்க்கு இது பணம், மற்றொருவர்க்கு பதவி, இன்னோருவருக்கு உறவு..... அடிப்படையில் அனைவரின் நோக்கமும் ஒன்றே.

இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று எங்கிருந்து இதை ஆரம்பிப்பது? எது சரி, எது தவறு?

அரசாங்கம் தவறு செய்பவர்களுக்கு (only for physical actions)தண்டனை கொடுக்கிறது (தவறு செய்யாத பலவீனர்களும் scape goats தண்டிக்கப்படுகிறார்கள் என்பது வேறுவிஷயம்).

தவறான எண்ணம் உள்ளதனால் மட்டுமே ஒருவரை தண்டிக்கமுடியாது. அது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே தண்டனை.....செயல்படுத்தினால் கூட இல்லை, பிடிபட்டால் மட்டுமே தண்டனை.

உங்களிடம் பணமோ, செல்வாக்கோ இருக்கும்பட்சத்தில் பிடிபட்டால் கூட தண்டனை இல்லை.

இப்படியாக நாம் வளர்ந்துவரும் இந்த சூழலில், புத்திசாலியாகவும், பலசாலியாகவும் இருப்பதே வாழ்வை இன்பமாக ஆக்கிக்கொள்ளும் அறிவுப்பூர்வமான வழி.

இதில் நல்லவர்களாக வாழவேண்டியதன் அவசியத்தை விளக்குமாறு பாவ, புண்ணியங்கள் மற்றும் இறைவன் பற்றிய பயங்கள் தவிர்த்த பகுத்தறிவாளர்களிடம் கேட்கிறேன்.

மறுபிறப்பு, இறை தண்டனை என்றெல்லாம் கும்மியடிக்காமல் அறிவுப்பூர்வமாக இருந்தால் ஆன்மிகவாதிகளும் பதிலளிக்கலாம்.

6 comments:

கோவி.கண்ணன் said...

உங்களுக்கு பதிலாக தனி இடுகை எழுதி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

இன்னும் ஒன்று நாத்திகர்கள் என்று இறை ஏற்பாளர்க்களுக்கு எதிர்பக்கமாக அவர்களை நிற்கவைத்தாலும், ஆத்திகர்கள் என்பவர்கள் யாரென்பதும் கேள்வியாகிறது.

ஆத்திகர்கள் என்பது பொதுபெயர்தான், மதப்பிரிவு அளவில் ஒரு பிரிவு மற்ற பிரிவை நாத்திகராகவே பார்க்கும், பார்க்கிறது. சமாதனத்துக்காக எல்லாம் 'ஒரே கடவுள்' என்பர். ஆனாலும் மதக் கொள்கையில் தான் அவர்களது நம்பிக்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது, பொதுக்கடவுள் எல்லாம் அதற்கு அடுத்த நிலையில் இருப்பதே ஐயம் தான். எட்டு (ஓம் நமோ நாராயணா - ஐந்து (சிவாய நம) கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் கூட உண்டு.

ரங்குடு said...

சதாமிடம் இல்லாத பணமில்லை, செல்வாக்கில்லை. அவருக்கு என்ன ஆனது?
தண்டனை யார் மூலமாகவோ வந்தது. இது ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன்.
தமிழில் உள்ள பக்திசாராத அற நூல்கள் எல்லாம் நல்லொழுக்கம், நற்கல்வி,
நற்சிந்தனை ஆகியவற்றின் அவசியத்தையும், அவற்றால் வரும் நன்மைகளையும்
விளக்குகின்றன. (திருக்குறள் பொதுவான கடவுள் வாழ்த்தைத் தவிர எந்த ஒரு
கடவுளையோ குறிக்கவில்லை.). நாலடியார், நான்மணிக்கடிகை, அற நெறிச்சாரம்,
பழமொழி, திரிகடுகம், ஏலாதி இவையெல்லாம் எந்த ஒரு மதக் கடவுளையும்
குறிப்பிட்டுச் சொல்வதில்லை. இன்னூல்களெல்லாம் பொதுவாக மக்களுக்கு
நல்லதைச் சொல்லின.
இவை எழுதப்பட்ட காலத்தில் எந்த எந்த மதங்கள் தமிழகத்தில் பரவியிருந்த்து என்று
எனக்குத் தெரியாது. ஆனால் சம காலத்திலோ அதற்கு முன்போ எழுதப்பட்ட
தேவாரம், திரு வாசகம், திருமூலம், திவ்விய பிரபந்தம் போன்றவற்றில் அறத்தை
விட, பக்தி செய்தால் போதும், பாவிகளும் உய்யலாம் என்ற ஒரு கருத்து வைக்கப்
படுகிறது.
இதிலிருந்து அற நூல்களைப் பின்பற்றுவது மிகக் கடினம். தவறுகள் பல செய்தாலும்
ஒரு நாராயணண், சிவன் பெயரை சாகும் போது சொன்னால் விமோசனம் என்ற
பக்தி வழி மிகவும் சுலபமானது என்பது தெரிகிறது.
நல்ல வழியில் வாழ்ந்தால், பாவ , புண்ணிய பயம் தேவையில்லை. கடவுள் நம்பிக்கை
தேவையில்லை. ஆனால், அற வழியில் வாழ்வது என்பது கடினத்திலும், மிகக் கடினம்.
கடவுள் நம்பிக்கை என்பது ஊனமுள்ள நமக்கு மதங்கள் கொடுத்த மூன்றாவது கால்.

பனிமலர் said...

உங்களிடம் உள்ள எல்ல நல்ல பொருட்களையும் வலிமையின் பெயரால் ஒருவன் அபகரித்துக்கொண்டால் உங்கள் உள்ளம் சமாதானம் ஆகுமோ. அவனிடம் இருந்தால் என்ன என்னிடம் இருந்தால் என்ன என்று இருந்து விடுவீர்களா என்ன. என்ன தான் ஆனாலும் என்னுடயது என்னுடையது தான் என்ற உத்திரவாதத்தை அளிப்பது நல்லவர்களால். நல்லவர்கள் என்றால் தன்னால் முடிந்தாலும் அடுத்தவருக்கு சொந்தமானவையை அபகரிகாது இருத்தல் என்றும் கொள்ளலாம் நண்பரே. எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் ஏன் இந்த நாடகமோ......

KARMA said...

கோவி, rangudu, பனிமலர்

அனைவர்க்கும் நன்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்கள் உங்களைவிட பலவீனமானவர்களை exploit அல்லது advantage எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

அப்படி நீங்கள் நல்லவராக இருப்பதால் உங்களை விட வலிமையானவர் உங்களை advantage எடுக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இது நீங்கள் vegitarian என்பதால் மாடு உங்களை முட்டாது என்ற நம்பிக்கையை போல் உள்ளது.

உங்களை விட வலிமையானவன் advantage எடுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், இப்போது என்ன செய்வது? அவனைவிட வலிமையானவனிடம் சென்று seek for solution, வழியில்லாதவர்கள் கோயிலுக்குச் செல்வார்கள்.


உங்களை சுற்றி நடப்பவைகளை நன்கு கவனித்துப் பாருங்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டலும் வலிமைதான் வாழும். ஈராக்-அமெரிக்க போர் ஒரு சிறந்த உதாரணம்.

"பல் இருப்பவன் பட்டாணி சாப்பிடுகிறான், உனக்கு என்ன? " என்ற வழக்கை நாட்டுபுறத்தில் கேட்டதுண்டா?

இப்போது சொல்லுங்கள். எதற்காக நல்லவராக இருக்க வேண்டும்? வலிமையற்றவர்கள், அல்லது தன் வலிமையை பிரயோகம் செய்து இன்பம் துய்க்க துணிவற்றவர்கள் தேடும் ஒரு சாக்கு-போக்கு தான் இந்த so-called "நல்லவன்" என்ற கருத்தில் தவறுள்ளதா?

அப்பாதுரை said...

'மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், விழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்' என்பது தன் உண்மை. (வழியிருந்தால் என்றார் கவிஞர்). பிறவிக்கடன் அல்லது பிறவிப்பலன் எனும் பித்தலாட்டத்தில் சிக்காமல், நம்முடைய வாழ்முறை நம் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது என்பதை உணர்ந்தால், 'மகிழ்ச்சி' நிச்சயமில்லாவிட்டாலும் 'துயரம்' தவிர்க்கலாம். முயற்சியுடையான் இகழ்ச்சியடையான். யாருக்காக அழுத போதும் தலைவனாகலாம். சும்மாவா சொன்னார்கள்? நல்லது நடந்தால் புண்ணியத்தின் பலன் என்றும் அல்லது நடந்தால் பாவத்தின் சம்பளமென்றும் பொய்ப்பிரசார வாதிகளை நம்பினால் உள்ளதும் போகும்.