Sunday, September 07, 2008

கேள்வி: குமரன், மதுரையம்பதி, கீதாம்மா ஞானவெட்டியான் மற்றும் அனைத்து இந்துமத அன்பர்களுக்கும்...!!!

இந்து சமயத்துக்கு வலையில் விவரித்தும், விளக்கமும் அளித்துக்கொண்டிருக்கும் குமரன், மதுரையம்பதி, கீதாம்மா, நா.கண்ணன், ஓம்கார் மற்றும் ஞானவெட்டியான் இன்னும் பலர்....இவர்கள் கீழ்கண்ட கோவிகண்ணன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தால் அனைவர்க்கும் மிக்க பலனுள்ளதாயிருக்கும்.

1. கர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா ?

எனது பதில்:

என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).

If someone knows better, please corrct me.

கோவியின் எதிர்வினை:

ஆன்மாவில் கர்மமற்ற நிலையில் எண்ண அலைகளே இருக்காது பிறகு எப்படி விருப்பம் தோன்றி பிறப்பு எடுக்க முடியும் ? முக்தி அடைவது என்றால் என்ன ? முக்தி அடைந்தவர் பிறக்க முடியுமா ?

இதற்கு உங்களின் பதில் தேவை.

கோவி அவர்களின் இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம்.

2. ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது ?

எனது பதில்

சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.

அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.

கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

கோவியின் எதிர்வினை:



பிறப்பு / இறப்பு உடல் தொடர்புடையது தானே, அது உண்மையும் கூட அதை எப்படி கற்பனை என்று சொல்ல முடியும் ? ஆன்மா என்று இருப்பதே பிறப்பின் பயனாகத்தானே அறிய முடியும் ? பிறப்பற்ற நிலையில் தன்னைத் தான் உணர்வது சாத்தியமா ? வெளிச்சம் எதன் மீது படவில்லை என்றால் வெளிச்சம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது தானே.

இதற்கும் உங்களின் பதில் தேவை.

6 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஏன் யாருமே பின்னூட்டமோ பதிலோ அளிக்கவில்லை :(

Shakthiprabha (Prabha Sridhar) said...

//எனது பதில்:என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice). If someone knows better, please corrct me.
கோவியின் எதிர்வினை:ஆன்மாவில் கர்மமற்ற நிலையில் எண்ண அலைகளே இருக்காது பிறகு எப்படி விருப்பம் தோன்றி பிறப்பு எடுக்க முடியும் ? முக்தி அடைவது என்றால் என்ன ? முக்தி அடைந்தவர் பிறக்க முடியுமா ?//

எனக்குத் தெரிந்த வரை நாம் இறை அம்சத்தின் அவதாரங்களைப் பேசும் போது அவர்களுக்கு "தான்" என்ற எண்ணம் மேலிடாத "கர்ம-யோக" முறைப்படியான சிந்தனை இருக்கு.

i.e. karma doesn't bind them, as they do NOT identify themselves with ego.

அதனால் கர்மா இன்றி, மனித ஷக்திகளின் விருப்பத்திற்கு இணங்க, (too many ppl invoking the supreme being by their devotion) thoughts dense ஆகும் பட்ஷத்தில் அவதாரம் எடுக்கப்பட்டிருக்கலாம்.

அதனால் விருப்பம் என்பது சுயத்தின் பேரில் ஏற்படாததால், யோகத்தில் விளைவது இறைவனின் அவதாரங்கள் அல்லது முக்தி அடைந்தோர் எடுக்கும் "காரண பிறப்பு" என்று கொள்ளலாம்.


தவறிருப்பின் திருத்திக்கொள்ள சித்தமாயிருக்கிறேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை//

அடி-முடி காணாத கதைகள் எதற்கு இருக்கின்றன. இதனைச் சுட்டிக்காட்டவே.

முதலும் முடிவும் இல்லாத வட்டங்கள் பிறப்பும் இறப்பும். காலமும் நேரமும் "முதன் - முதல்" என்ற சொற்ப்ரயோகமும் "time" என்ற concept மூலம் கொணரப்பட்டது. It is said, therez no such concept called 'time' beyond the perceiver's eyes.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//பிறப்பு / இறப்பு உடல் தொடர்புடையது தானே, அது உண்மையும் கூட அதை எப்படி கற்பனை என்று சொல்ல முடியும் ? //

உங்கள் கனவு நிலையில் கனவை நிஜமென்றே நினைக்கிறீர்கள். அது கற்பனை அல்ல. அதில் நடந்த சம்பவங்கள், பயங்கள் துக்கங்கள் எல்லாமே சத்தியம்.

கனவு கலைந்து மீண்டு எழுந்தால், கனவை நிஜம் என்று உரைப்பீர்களா?

When u rise to a diferent "sense of consciousnesS" இந்த பிறவி உடல் எல்லாம் கனவு போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்...என நினைக்கிறேன் :P

Shakthiprabha (Prabha Sridhar) said...

// ஆன்மா என்று இருப்பதே பிறப்பின் பயனாகத்தானே அறிய முடியும் ? பிறப்பற்ற நிலையில் தன்னைத் தான் உணர்வது சாத்தியமா ? //

நீங்கள் ஆன்மாவா? இல்லை உடலா? மனமா?

நீங்கள் வெறும் "இருப்பு" என்ற consciousness என்று சொல்கிறார்கள். supreme consciousness or bliss, இருப்பு நிலையே, "இருப்பது" தான் அதற்கு உடலோ, மனமோ, ஆன்மாவோ தேவையில்லை. Its self luminating.

//பிறப்பற்ற நிலையில் தன்னைத் தான் உணர்வது சாத்தியமா ?//

உணர்வு என்று வரும் போதே எண்ணம் என்பது வந்து விடுகிறது என்று நினைக்கிறேன். அது எண்ணமற்ற tranquil நிலை. ஆனால் "தன்னை உணர்ந்த நிலை"

:(

என்று சொல்கிறார்கள்.

"கண்டவர் விண்டிலர்,
விண்டவர் கண்டிலர்"

it cant be explained, it has to be experienced, I suppose ....

KARMA said...

ஷக்திப்ரபா,

உங்கள் வருகைக்கு நன்றி. கருத்துக்களின்மூலம் மிக நுட்பமான விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். அனைவர்க்கும் மிகச்சிறிதளவேனும் அனுபவமாய் இது வாய்க்கப்படட்டும் என்றே எண்ணிக்கொள்கிறேன்.