நதிக்கரை தோன்றி, சமவெளி நோக்கி
மனிதம் பாய்ந்த காலம் முதலாக
நடந்து கொண்டுதானிருக்கிறது இந்த
மதம் பிடித்த மனித விளையாட்டு
மதத்திற்குள் புகுந்து ஞானத்தை
தேடிக் கொண்டே இருங்கள்
பூமியின் வெளிக்கு அப்பால்
கிழக்கு மேற்கு தேடுவது போல
சமயங்களும் சம்பிரதாயங்களும்
ஒட்டிக் கொண்டு விட்டன சமூகத்துடன்
உடம்போடு ஒட்டிக் கொண்ட
வியாதியைப் போலவே
எங்கோ ஓர் மனிதனின் விசித்திர
கற்பனையில் பிரசவித்த கடவுள் கையில்
சகல உயிர்களும் சர்வ பத்திரமாய்
சுய ஒழுக்கம் .. அப்படீன்னா?
தொழில் தர்மம் .. தேவையே இல்லை
பிழைக்கத் தெரிந்திருந்தால் போதுமானது!
புண்ணியம் போதவில்லையென்றால் ..
இருக்கவே செய்கிறது கோயில் உண்டியல்.
தரிசனமென்பது தனிமனித சாத்தியமே அன்றி
கோஷமிட்டு அலையும் கூட்டத்திற்கு அல்ல,
அது காவி அணிந்திருப்பினும் சரி
கருப்பு அணிந்திருப்பினும் சரி.
மனித அபத்தங்களுக்குத் தீர்வான
ஞானச்சரக்கு எந்தக் கடையிலும்( மத அமைப்பிலும்)மொத்த விலைக்கு இல்லவே இல்லை.
சமைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கானதை
நீங்களாகவே...
விடியும் வரைக்குமென்றாலும் விழித்தே இருங்கள்
விடுதலைக்கான கீறல் விண்ணில் தெரியும் வரை...
இல்லையேல் ..?
பச்சையோ,வெள்ளையோ
காவியோ, கருப்போ - உடுத்திக் கொண்டு
கிளம்பலாம் வாருங்கள் - நமக்குப் பிடித்த மதத்தைபிறர்க்கும் பிடிக்கச் செய்ய ...
5 comments:
"மதம் பிடித்தவர்களுக்கு" சரியான சாட்டையடி, உங்கள் கவிதை.
வாழ்த்துக்கள், அருமையான கவிதை.
மதம் பக்தி அல்ல, அது ஒரு உலகை ஆளத்துடிக்கும் ஒரு அரசியல் ஆயுதம்.
அருமை அருமை, மிக அருமை.
இந்தியாவில் இல்லை இல்லை உலகளவில் மதம் மிகப்பெரிய அரசியல் விளையாட்டு.
பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் நண்பர்கள் கார்திக், குடுகுடுப்பை மற்றும் மஸ்தான் அனைவர்க்கும் நன்றி.
அருமை!
நல்ல கவிதை.
சிறந்த சிந்தனை.
அறிவும் அன்பும் சிவம்.
ரிச்சர்ட்.
Post a Comment